பீய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பலி குறைந்ததையடுத்து வூகான் மாகாணத்தில மருத்துவமனை டாக்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சீனாவில் வூகான் மாகாணாத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவத்துவங்கி இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்குதலால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழிந்தனர். இதற்கு அடுத்து ஐரோப்பிய நாடான இத்தாலியில் இந்த வைரஸ் தாக்குதலால் உயிர்பலி தினம் தினம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பிற்கு இரண்டு பேர் பலியாகி உள்ளனர்
இந்நிலையில் தொற்று நோய் பரவ காரணமான சீனா அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வந்த நிலையில் அங்கு உயிர்பலி குறைந்துள்ளது. சீனாவில் தொற்று நோய் பரவிய போது தினம் தினம் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. அதனை கட்டுப்படுத்துவதற்காக வூகானில் 14 அவசர கால தற்காலிக மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. தற்போது வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதால் வூகான் மாகாணத்தில் தற்காலிக செயல்பட்ட மருத்துவமனைகள் அனைத்து மூடப்பட்டன. அங்கு பணி புரிந்த டாக்டர்கள் ஒவ்வொருவராக தாங்கள் அணிந்திருந்த முக கவசத்தை கழற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.