குழந்தை பிறப்பு விகிதத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் புத்தாண்டு தினத்தில் பிறக்கும் குழந்தைகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிடுகிறது. 2020 புத்தாண்டு தினத்தில், ஜனவரி 1ஆம் தேதி பிறந்த குழந்தைகள் பற்றி தகவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. சபை அளித்துள்ள தகவலில் ஜனவரி 1ஆம் தேதி உலகம் முழுவதும் 3,92,078 குழந்தைகள் பிறந்தன என்றும் இந்தியா அதிகபட்சமாக 67,385 குழந்தைகள் பிறந்தன என்றும் கூறியிருக்கிறது.
இதுவரை குழந்தை பிறப்பு விகிதத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. உலகில் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகளில் 17 சதவீதம் குழந்தைகள் இந்தியாவில் பிறந்தவை.
இந்தியாவுக்கு அடுத்து சீனாவில் 46,299 குழந்தைகளும் நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும் பாகிஸ்தானில் 16,787 குழந்தைகளும் இந்தோனேசியாவில் 13,020 குழந்தைகளும் அமெரிக்காவில் 10,452 குழந்தைகளும் பிறந்திருக்கின்றன.