என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி

சென்னை: தனது பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி ரசிகர்கள் சமூக நல தொண்டுகளில் ஈடுபட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.


டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து கூறி பதிவிடப்பட்ட பதிவுகள், தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் டிரெண்ட் ஆனது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் இன்று இரவு இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதை பாருங்கள்: என் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி,


என்னை வாழ்த்திய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும், என்னை நெஞ்சார வாழ்த்திய தமிழ் மக்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும்,


மற்றும் பல துறையிலிருக்கும் அன்பர்களுக்கும், பத்திரிக்கை, ஊடக மற்றும் தொலைக்காட்சியினருககும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.