Solar Eclipse Astrology Effects: சூரிய கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசிகள்... பரிகாரம் இதோ

சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த நிகழ்வின் போது பாதிக்கப்படக் கூடிய ராசி நட்சத்திரங்கள் என்னென்ன, அவர்கள் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்.



கிரகணம் என்றால் அது அசுபமான நிகழ்வு என்று நினைக்கின்றனர். ஆனால் கிரகணம் என்பது ஒரு மிகச் சிறந்த பிரார்த்தனை செய்யக் கூடிய சுப நேரம். அதாவது கற்பனைக்கூடிய செய்யக் கூடியாத அளவிற்கு நற்பலனை அடைவதற்கு இந்த கிரக நேரத்தில் பூஜை செய்வது முக்கியம். இதனை பல ஞானிகள் செய்துள்ளனர். செய்தும் வருகின்றனர்.


 


அரக்கர்கள், அசுரர்கள் பலி கொடுத்து பிரார்த்தனை செய்து பல்வேறு அசுர சக்திகளை பெற்ற கதைகள் உண்டு. ஆனால் நாம் அப்படி பலி எல்லாம் கொடுக்கத் தேவையில்லை. நாம் முறையாக வழிபாடு செய்தாலே போதுமானது. மிக சிறந்த பலனைப் பெறலாம். அது என்ன முறையான வழிபாடு என்பதைப் பார்ப்போம்.


 


Also Read: சூரிய கிரகணம் எப்போது? - திருப்பதி, சபரிமலை ஐயப்பன் கோயில் அடைக்கப்படும் விபரம் இதோ...



 


​சூரிய கிரகணம் என்றால் என்ன?



சூரிய கிரகணம் என்றால் என்ன?


சந்திரன் பூமியையும்,. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன்- பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) என்ற நிகழ்வு ஏற்படுகின்றது.


 


கிரகண சூட்சமம்:


பூமி மனித உடலையும், சந்திரன் மனமும், சூரியன் ஆத்மாவையும் குறிக்கும்.


உடல், மனம், ஆன்மாவை ஒன்றிணைக்கச் செயற்கையாக ஆன்மிக பயிற்சி செய்து பெறக்கூடிய முறை யோகம் என்கிறோம். ஆனால் கிரகணத்தின் போது இயற்கையாகவே யோகம் பெற உந்துதலை ஏற்படுத்துகிறது.


 


Also Read: இந்துக்கள் கோவிலில் தேங்காய் உடைப்பதில் உள்ள ரகசியம் என்ன?... இதுக்குள்ள இவ்ளோ இருக்கா?...



 


​கிரகணம் எப்போது?